ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவிடலாம் – சுனில் அரோரா

Default Image

ஒரு வேட்பாளர், ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி  பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் எப்போது தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு வேட்பாளர், ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில், ரூ.22 லட்சம், மற்ற 4 மாநிலங்களிலும் ரூ.30.8 லட்சம் தேர்தல் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்