திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது புகாரளித்த ஜெர்மனி பெண்.!

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக ஜெர்மனி பெண் புகாரளித்துள்ளார் .
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி தனக்கு பெண் தேடினார்.16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து தனக்கான பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்யாத ஆர்யா அதன் பின் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது ஜெர்மனி பெண் ஒருவர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதார துறையில் பணிபுரிந்து வருகிறார்.இந்த புகார் குறித்து விட்ஜா கூறுகையில்,கொரோனா லாக்டவுனின் போது ஆர்யா தன்னிடம் படம் இல்லை என்றும்,பணத்திற்காக கஷ்டப்படுவதாகவும் கூறியதுடன் ,தன்னை அவர் விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். எனவே நான் அவருக்கு ரூ.70,40,000 பணத்தை கொடுத்ததாகவும் , ஆனால் அதன் பின் தன்னை திருமணம் செய்ய மறுத்ததுடன் பணத்தையும் திருப்பி கேட்ட போது பணத்தை திருப்பி தர மறுத்ததுடன் அவரது தாயார் தன்னை மோசமாக திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஆன்லைன் வழியாக பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கு புகார் அளித்ததுடன் ஆர்யா மோசடி செய்த ஆதாரங்களையும் , ஆர்யாவின் தாயாருக்கும் விட்ஜாவுக்கும் இடையே நடந்த வாக்குவாதங்களையும் ,பட பரிவர்த்தனை செய்த ஆதாரங்களையும் புகாருடன் விட்ஜா இணைத்துள்ளார் .விட்ஜா அளித்த புகார் குறித்து விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்