#BreakingNews : வங்கிக்கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

Default Image

வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மேலும், இவரை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.அதன்படி இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கோரி இந்திய அரசு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.அதில்,நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிபதி சாமுவேல் கூஸ்  வெளியிட்டுள்ள தீர்ப்பில், நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடிக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற எவ்வித ஆதாரமும் கிடையாது.இந்திய அரசு , மோடி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டால் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார். அங்கு அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. இதனால் நிரவ் மோடியை  இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை  என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்