தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி.
இன்று புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, அங்கு பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி, சில திட்டங்களி தொடங்கி வைத்தார். இதன்பின் பாஜக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார். இந்நிலையில், புதுச்சேரி வந்த பிரதமர் தனது பயணத்தை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இவ்விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றுள்ளனர். இதன்பின் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் மோடிக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!
March 31, 2025