இன்று முதல் நடிகராக களமிறங்கும் செல்வராகவன்..!
இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்ததாக தனுசை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் மற்றும் d43 படத்தில் நடித்து வருவதால் இரண்டு படங்களை முடித்துவிட்டு நானே வருவேன் படத்தில் இணைவார் என்று கூறப்ப டுகிறது. இதற்கிடையில் இயக்குனர் செல்வராவன் இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார். இந்த படத்தில் இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
23 years of filmmaking and then from today as an actor ! #saanikaayidhamshoot
I owe it all to my fans ! They made me ! pic.twitter.com/1WWew7Fiwy— selvaraghavan (@selvaraghavan) February 25, 2021
மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக யக்னமூர்த்தி என்பவர் பணியாற்றவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.