திடீரென கடலுக்குள் குதித்த ராகுல் காந்தி…! ஒரேயொரு மீன் தான் கிடைத்தது…!

Default Image

கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றுள்ளார்.

கேரளாவின் வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி ஆகும். இங்கு அவர் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா சென்றுள்ளார். எங்கு சென்றாலும் மக்களோடு மக்களாய் இயல்பான முறையில் பழகும் இவரது குணம் மக்களை கவர்ந்து இழுக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது மீனவர்கள் படகில் பயணம் செய்த போது கடலில் வைத்து சமைத்துக் கொடுத்த மீனையும் அவர் ருசித்து சாப்பிட்டுள்ளார். பின் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராகுல் காந்தி திடீரென தனது சட்டையை கழட்டிவிட்டு கடலில் குதித்துள்ளார். இதனால் உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சற்று பதற்றம் அடைந்தனர். ஆனால் கடலில் குதித்த ராகுல்காந்தி சில நிமிடங்கள் கடலில் நீந்தி, பின் படகில் ஏறினார்.

இதுகுறித்து படகின் உரிமையாளர் கூறுகையில், ராகுல்காந்தி கடலில் எங்களுடன் சுமார் 3 மணி நேரம் செலவழித்தார். இதற்காக இன்று காலை 4:00 மணிக்கு அவர் கடற்கரையில் தயாராக இருந்தார். நாங்கள் சமைத்து கொடுத்த மீனையும் ருசித்து சாப்பிட்டார்.  எங்களுடன் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் சகஜமான முறையில் பழகினார் என் அதெரிவித்தார்.

ராகுல் காந்தி கடலுக்கு சென்ற அனுபவம் குறித்து கூறுகையில், ‘மீனவர்கள் வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டேன். அதனால், இன்று காலை எனது சகோதரர்களுடன் கடலுக்கு சென்றேன். கடலுக்கு சென்ற படகில்  மீண்டும் கரைக்கு திரும்பும் வரை ஒட்டுமொத்தமான கஷ்டமான நிலையை அடைகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கடலில் சென்று வலைவிரித்து மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். சிலர் பயனடைகிறார்கள். நாங்கள் மீன்பிடிக்க விரும்பினாம். அனால், ஒரேயொரு மீன் தான் கிடைத்தது. முதலீடு செய்தும், வலை  காலியாகவே இருந்தது. இது தான் என்னுடைய அனுபவம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்