பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும் – கமல்ஹாசன்
பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை தந்தாக சிறப்பு டிஜிபி ரமேஷ் தாஸ் என்பவர் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்திருந்தார்.பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2021