அட்டகாசமான சுவை கொண்ட கல்யாண வீட்டு சேமியா பாயாசம் வீட்டிலேயே செய்வது எப்படி?

Kalyan House Semiya Payasam

கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சேமியா பாயாசத்தை பலருக்கும் பிடிக்கும். ஆனால் இதை எவ்வாறு வீட்டில் செய்வது என்ற முறையான ஒரு செய்முறை பலருக்கும் தெரியாது. இன்று அதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • சேமியா
  • ஜவ்வரிசி
  • முந்திரி
  • நெய்
  • சர்க்கரை
  • பால்
  • உப்பு
  • ஏலக்காய்த்தூள்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பு, உலர் திராட்சை மற்றும் விருப்பப்படுபவர்கள் பாதாமும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுக்காமல் சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து களி போலாகிவிடும். எனவே லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு அதே சட்டியில் ஜவ்வரிசியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் வறுத்து வைத்துள்ள ஜவ்வரிசியில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக வேகவைத்து அதன் பின்பு, காய்த்து வைத்துள்ள பாலை சேர்த்து கிளறவும். கொதி வந்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். சேமியா ஐந்து நிமிடத்திற்குள் நன்றாக அவிந்துவிடும். இதற்குள் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கினால் அட்டகாசமான சேமியா பாயாசம் வீட்டிலேயே தயார். இனி சேமியா பாயாசம் சாப்பிடுவதற்காக கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்