கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை., அது நடக்காது – டிடிவி தினகரன்
அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதிமுகவில் அமமுக இணையும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருதத்தை சசிகலா கூறியிருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் சசிகலா தொடுத்த வழக்கு மார்ச் 15ல் விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு பின் என்ன நடவடிக்கை என்பது குறித்து சசிகலாவே தெரிவிப்பார் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.