சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் முக்கிய அறிவிப்பு.!
நடிகர் சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் ஷிமோகா செட்டியூல் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனரும் ,நடிகருமான சசிகுமார் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அதில் ஒன்று “பகைவனுக்கு அருள்வாய்” .’திருமணம் என்னும் நிக்கா’ படத்தை இயக்கிய அனிஸ் அப்பாஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.அவருடன் பிந்து மாதவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் கிளாசிக் புத்தகமான மாக்பெத்தை தழுவி உருவாக்கப்பட உள்ள இந்த படத்தினை 4 மங்கி ஸ்டுடியோ தயாரிக்கிறது.மேலும் ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.ஷிமோகாவில் நடைபெற்று வந்த பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பகைவனுக்கு அருள்வாய் என்ற பெயருடன் படக்குழுவினர் டீ ஷர்ட் ஒன்று அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
#PagaivanukuArulvai shimoga schedule wrapped up.
Directed by @AnisDirector @SasikumarDir @vanibhojanoffl @thebindumadhavi @sathishninasam @GhibranOfficial @4monkeysStudio @tkishore555 @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/MtGmEHnS29
— CtcMediaboy (@CtcMediaboy) February 24, 2021