#BREAKING: புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி – பிரதமர் தலைமையில் ஆலோசனை.!
புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை.
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்திருந்தார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் கூட்டத்தில் புதுச்சேரி குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.