யூகோ வங்கி முன்னாள் அதிகாரி..!! மீது ரூ.621 கோடி மோசடி வழக்கு…!! பதிந்தது சிபிஐ…!!
யூகோ வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர், அருண் கவுல். இவர் பணியில் இருந்தபோது, தனக்கு வேண்டியவர்களுக்கு கடன் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், கடன் பெற்றவர்கள், அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
அதன்பேரில், சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை நடத்தியது. அதில், குற்றச்சதியில் ஈடுபட்டு யூகோ வங்கியில் ரூ.621 கோடி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, யூகோ வங்கி முன்னாள் தலைவர் அருண் கவுல் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. ஆடிட்டர்கள் பங்கஜ் ஜெயின், வந்தனா சாரதா உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியில் 8 இடங்களிலும், மும்பையில் 2 இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்