அதிகரிக்கும் கொரோனா ! பஞ்சாப் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை
கடந்த சில நாட்களாக பஞ்சாப்பில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ,பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக முடங்கி இருந்து.உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.இதனால் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இதனிடையே தான் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் .