#TNBudget2021Live: தமிழக இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்., இதோ உங்களுக்காக நேரலையில்.!
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2021-22ன் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்:
- தமிழக இடைக்கால பட்ஜெட் உரையை ஓ.பன்னீர்செல்வம் வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் மற்றும் அமளியில் ஈடுபட்டனர்.
- பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே, தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி.
- இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.
- திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் ஓபிஎஸ்.
- தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு – ஓபிஎஸ்
- கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கீடு.
- அடுத்து சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
- இதில் 2 ஆயிரம் பேருந்துகள் மின்சார பேரூந்துகளாக இருக்கும். முதல்கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
- ரூ.1,580 கோடியில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
- 2020-21 ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்.
- மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- மின்துறைக்கு ரூ.7,217 கோடி, உயர்கல்வித்துறை ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு.
- நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என ஓபிஎஸ் திட்டவட்டம்.
- கொரோனா தொற்று 1%க்கும் குறைவாகவே உள்ளது.
- கொரோனா நோய் தொற்று இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
- 1.68 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ13,352 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஒப்புதல் தரப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்ற 2021-22 ஆம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும்.
- வேளாண்துறை ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழக தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு.
- பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்காக (கிராமப்புறம்) ரூ.3,548 கோடி நிதி ஒதுக்கீடு.
- பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்காக (நகர்ப்புறம்) ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு.
- உள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி நிதி ஒதுக்கீடு.
- நீர்வள துறைக்கு ரூ.6,453.17 கோடி நிதி ஒதுக்கீடு.
- காவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி ஒதுக்கீடு.
- நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு.
- மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி நிதி ஒதுக்கீடு.
- நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி நிதி ஒதுக்கீடு.
- பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
- 6 முதல் 10 வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் – ஓபிஎஸ்
- தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69% ஆக இருக்கும் – ஓபிஎஸ்
- தீயணைப்பு மீட்டுத்துறைக்கு ரூ.4,436 கோடி நிதி ஒதுக்கீடு.
- மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஓபிஎஸ்
- குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும்.
- நகர்ப்புற வடிகால் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஸ்மார்ட் சிட்டி ரூ.2,350 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218.58 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஊரக சாலை திட்டத்துக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
- சமூக நலத்துறைக்கு ரூ.1,953 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள், 18 வருவாய் கோட்டங்கள் உருவாக்கம் – ஓபிஎஸ்
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கான நிதி உதவி அதிகரிப்பு – ஓபிஎஸ்.
- கைத்தறி துறைக்கு ரூ.1,224.26 கோடி நிதி ஒதுக்கீடு.
- கனடாவின் டொரொண்டோ பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க நிதி உதவி – ஓபிஎஸ்
- பெட்ரோல், டீசல் மீதான ஆயத்தீர்வையில் தமிழகத்துக்கான பங்கு குறைந்துள்ளது.
- காவல்துறையை நவீனமயமாக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு.
- மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்திறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது – ஓபிஎஸ்
- மாற்றுத்திறனாளி நலனுக்கான திட்டம் உலக வங்கியின் பரிசீலினையில் உள்ளது.
- 2021-22ல் மாற்றுத்திறனாளி நலனுக்காக ரூ.688.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மாநகர தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டத்திற்கு ரூ.3,140 கோடி நிதி ஒதுக்கீடு.
- 8 ஆண்டுகளுக்குப் பின் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
- அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி நிதி ஒதுக்கீடு.
- 15.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,715 கோடி நிவாரணம்.
- இயற்கை பேரிடர்: 1 ஹெக்டேருக்கான நிவாரண தொகை ரூ.13,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு – ஓபிஎஸ்
- அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு.
- 55.67 லட்சம் ஏழை குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணமடைந்தால் ரூ.2 லட்சம் நிதி உதவி – ஓபிஎஸ்
- கால்நடைகளுக்கு நடமாடும் அம்மா அவசர வாகன சேவை தொடக்கம்.
- தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமலில் உள்ளது.
- 71,766 பேருக்கு வேலை வழங்க ரூ.39,941 கோடியில் 62 முதலீடுகளுக்கு விரைவில் அனுமதி – ஓபிஎஸ்
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் மானியம் குறைப்பு.
- 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ144.33 கோடி நிதி ஒதுக்கீடு.
- இளைஞரகள் நலன், விளையாட்டு என ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு.
- சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,953.98 கோடி நிதி ஒதுக்கீடு.
- உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.1,932.19 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2021-22ல் ரூ.84,686.85 கோடி கடன் வாங்க இலக்கு – ஓபிஎஸ்
- 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,470.93 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழக வரிவருவாய் 17.64% குறைந்துள்ளது.
- அத்திக்கடவு – அவிநாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும் – ஓபிஎஸ்
- திருமண நிதி உதவி- 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடி மதிப்பில் தங்கம் வழங்கப்பட்டது.
- மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் பணிகளுக்கு ரூ.1374 கோடி நிதி ஒதுக்கீடு
- பிரதமர் வீட்டு வசதி திட்டம்- மேற்கூரைக்கான மானியம் ரூ70,000 ஆக அதிகரிப்பு.
- தமிழகத்துக்கான பல்வேறு நிதியை மத்திய அரசு வழங்கவில்லை- ஓபிஎஸ்
- நிலுவையில் உள்ள நிதிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்- ஓபிஎஸ்
- பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
- பெட்ரோல், டீசல் மீதான புதிய செஸ் வரியை நீக்க வேண்டும்- ஓபிஎஸ்