திமுக தலைவர் ஸ்டாலினின் ட்வீட் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது – நாராயணசாமி
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், எனக்கு ஆதரவாக ட்வீட்டரில் பதிவிட்டிருந்த பதிவை என்னை மகிழ்ச்சி அடைகிறேன்.
புதுச்சேரியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பானமையை நிரூபிக்க முடியாத நிலையில், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாகவும், சட்டப்பேரவையில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நாராயணசாமி அவர்கள், தனது ராஜினாமா கடிதத்தை துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார். இந்நிலையில், நாராயணசாமி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், எங்களது நீண்ட கால போராட்டத்தின் விளைவாக கிரண்பேடி வெளியேற்றப்பட்டார். புதுச்சேரியின் துணை ஆளுநராக வந்துள்ள தமிழிசை அவர்கள், மத்திய அரசின் சில திட்டங்களோடு வந்துள்ளார்.
திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது – அதிகார துஷ்பிரயோகம் இது!
ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் @VNarayanasami-ன் துணிச்சலை வாழ்த்துகிறேன்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்! pic.twitter.com/cq8LIcoVpn
— M.K.Stalin (@mkstalin) February 22, 2021
அந்த திட்டத்தின் வெளிப்பாடு தான் என்னை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சொன்னதும், எங்களது அமைச்சரவையை கலைப்பாதற்கான திட்டமும். தற்போது நான் மன நிறைவுடன் இருக்கிறேன். பல தடைகளை தாண்டி வந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், எனக்கு ஆதரவாக ட்வீட்டரில் பதிவிட்டிருந்த பதிவை என்னை மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.