டாக்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள்..! எப்போது வெளியாகிறது தெரியுமா..?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் மூன்றாவது பாடல் வருகின்ற 25 ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள டாக்டர் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதாவது செல்லம்மா ,நெஞ்சமே ஆகிய பாடல்களின் வெற்றியை தொடர்ந்து டாக்டர் படத்தின் மூன்றாவது பாடலான SoBaby பாடல் வருகின்ற 25 ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
To all lyricist @Siva_Kartikeyan fans, #Doctor next single #SoBaby is ready and releasing on Feb 25th ????
To all @Nelsondilpkumar fans, here is the promo video – https://t.co/cp6kaZnYiu
watch it and enjoy ???????? #VeraMari ????
— Anirudh Ravichander (@anirudhofficial) February 22, 2021