திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பணக்காரர்களாக மாறி வருகின்றனர் – பிரதமர் மோடி பேச்சு

Default Image

வங்காள அரசின் திட்டங்களின் பண பலன்கள் திரிணாமுல் காங்கிரஸ் அனுமதியின்றி ஏழைகளுக்கு எட்டாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், உங்கள் அனைவரின் இந்த உற்சாகமும் ஆற்றலும் கொல்கத்தாவிலிருந்து மாற்றத்திற்கான மனதை உருவாக்கியுள்ளது.இந்த ஆண்டு ‘ரயில் & மெட்ரோ’ இணைப்பு மத்திய அரசின் முன்னுரிமை ஆகும். இதுபோன்ற பணிகள் பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட வேண்டும். இப்போது நாம் தாமதிக்கக்கூடாது- ரயில் பாதைகளை விரிவுபடுத்துவது முதல் மின்மயமாக்கல் பணிகள் வரை, உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் .மத்திய அரசு நேரடியாக விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுகிறது. ஆனால் வங்காள அரசின் திட்டங்களின் பண பலன்கள் திரிணாமுல் காங்கிரஸ் அனுமதியின்றி ஏழைகளுக்கு எட்டாது. இதனால்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பணக்காரர்களாக மாறி வருகின்றனர்.சாதாரண குடும்பங்கள் ஏழ்மை நிலையில் உள்ளன.

பங்கிம் சந்திர சட்டர்ஜி 5 ஆண்டுகளாக வாழ்ந்த வந்தே மாதரம் பவன் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கிய கவிதை வந்தே மாதரம்.இந்த பாடல் எழுதிய இடம் இதுதான் .பங்கிம் சந்திர சட்டர்ஜி வாழ்ந்த இடத்தை ஒரு நன்றாக வைத்திருக்கத் தவறியது மேற்கு வங்கத்தின் பெருமைக்கு அநீதியாகும் .இதில் பெரும் அரசியல் உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 1.75 கோடி வீடுகளில், 9 லட்சம் தண்ணீர் குழாய் மட்டுமே உள்ளது. மாநில அரசு செயல்படும் விதம், ஏழைகளுக்கு தண்ணீரை வழங்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதில் ஆச்சரியமில்லை. திரிணாமுல் காங்கிரஸ் அநீதி இழைப்பதை இது காட்டுகிறது. அவர்களை மன்னிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்காக தங்கள் கலாச்சாரத்தை அவமதிப்பவர்களை வங்க மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்