nz vs aus : சதத்தை நழுவிய கான்வே.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற நியூஸிலாந்து!

Default Image

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் நியூஸிலாந்து வீரரான கான்வே, 99 ரன்கள் குவித்தார்.

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி சார்பாக முதலில் கப்தில் – செய்பெர்ட் களமிறங்கினார்கள்.

இவர்களின் தொடக்கம் அதிரடியாக அமையக்கூடும் என எதிர்பார்த்த நிலையில், 3 ஆம் பந்தில் கப்தில், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் 1 ரன் மட்டுமே எடுத்து செய்பெர்ட் வெளியேறினார். அதனைதொடர்ந்து 12 ரன்கள் மட்டுமே அடித்து கேப்டன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் களமிறங்கிய கான்வே, சிறப்பாக ஆடிவந்தார்.

30 ரன்கள் அடித்து பிலிப்ஸ் வெளியேற, மறுமுனையில் விளையாடி வந்த கான்வே, அரைசதம் விளாசி அசத்தினார். அவரையடுத்து களமிறங்கிய நீஷம் 26 ரன்கள் அடித்து வெளியேறினார். இறுதியாக நியூஸிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கான்வே 99 ரன்கள் அடித்து அசத்தினார்.

nz vs aus

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேதிவ் வைடு – ஆரோன் பின்ச் களமிறங்கினார்கள். 1 ரன் மட்டுமே அடித்து ஆரோன் பின்ச் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பிலிப்பி, 2 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் களமிறங்கி நிதானமாக ஆடி வர, அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி, 17.3 ஓவர் முடிவில் 131 ரன்கள் எடுத்து, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து நியூஸிலாந்து அணியிடம் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் நியூஸிலாந்து அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் இஸ் சோதி தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அடுத்த நடைபெறவுள்ள இரண்டாம் டி-20 போட்டி, யூனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் வரும் 25 ஆம் தேதி விளையாடவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்