விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணியில் டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி
கேரளாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கேரளா ஒரு முக்கியமான மாநிலமாகும். கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 20 இடங்களில் 19 இடங்களை கைப்பற்றியது.இதனிடையே கேரளாவில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேசிய கட்சியினர் தங்களது பிரச்சாரங்களை தற்போதே தொடங்கியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்தில் சென்றுள்ளார்.இந்த இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மண்டட் முதல் முட்டில் வரை நடைபெறும் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தியே டிராக்டரை இயக்கி தொடங்கி வைத்தார்.இந்த பேரணியில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.