பிக்பாஸ் 14-வது சீசனின் டைட்டிலை தட்டி சென்ற டிவி சேனல் பிரபலம்.! குவியும் வாழ்த்துக்கள்.!

Default Image

பிக்பாஸ் சீசன் 14-ன் டைட்டிலை டிவி சேனல் பிரபலமான ரூபினா திலிக் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது.சமீபத்தில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நான்காவது சீசனும் , தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய நான்காவது சீசனும் நிறைவடைந்தது .அதே போன்று மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 4 -ஆனது சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனை மோகன்லால் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்தியிலும் பிக்பாஸ் சீசன் 14 விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.சல்மான் கான் தொகுத்து வழங்கிய சீசன் 14-ன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் தற்போது வின்னர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது .பல சீரியல்களில் நடித்து பிரபலமான டிவி சேனல் பிரபலம் ரூபினா திலிக் பிக்பாஸ் சீசன் 14-ன் டைட்டிலை வென்றுள்ளார்.மேலும் நடிகர் ராகுல் வைத்யா ரன்னராக வென்றுள்ளார்.

பல சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புகளை கடந்து வின்னராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் 6-வது பெண் போட்டியாளர் என்ற பெருமையையும் ரூபினா திலிக் பெற்றுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்