வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு ஆசீட் அடித்த இளைஞர் – காரணம் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்!

Default Image

தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் இளம்பெண் மீது ஆசிட் அடித்த இளைஞர் உத்திரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய காலத்தில் இளம்பெண்கள் இளைஞர்களுடன் நட்பாக பழகுவதும் காதல் வயப்பட்டு பேசுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த உறவு முறிந்து விடும் பட்சத்தில் சில ஆண்கள் கண்மூடித்தனமான கோபத்தில் தவறான முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர். சிலர் தங்களை தாங்களே மாய்த்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் விலகிச் சென்ற பெண்களை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கொலை வரை சென்று விடுகின்றனர். அதுபோல உத்திரபிரதேச மாநிலத்தில் ஹப்பூர் எனும் பகுதியில் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு இருந்த இளம்பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் அந்தப் பெண்மிகவும் காயமடைந்த நிலையில் மீரட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்பிரச்சனை குறித்து விசாரித்ததில், இளம்பெண்ணுக்கு ஆசிட் அடித்த இளைஞனும் அந்தப் பெண்ணும் சிறிது காலம் நட்பாக பழகி வந்ததாகவும் அதன் பின்பு அந்தப் பெண் அந்த இளைஞனுடன் பேசுவதை நிறுத்தி விட்டதால் கோபத்தில் அந்த இளைஞர் பெண் மீது ஆசிட் வீசியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்பொழுது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பேசவில்லை எனும் ஒரு காரணத்திற்காக பெண் மீது இளைஞன் ஆசிட் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்