கடைசி நேரத்தில் முதல்வர் கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார்- மு.க.ஸ்டாலின்..!

Default Image

திருப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை செயல்பட முடியாமல் திணறி வருகிறது.

திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களை மத்தியில் பேசிய, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆட்சி முடியப்போகிறது கடைசி நேரத்தில் முதல்வர் கல்வெட்டுகளைதிறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் தொடங்கும் போது நல்ல திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும், ஆட்சி முடிவதற்குள் திட்டங்களை திறந்து வைக்க வேண்டும். ஆனால் முதல்வர் பின்னாடி நடந்து கொண்டு செல்கிறார்.

நான்காண்டு காலம் முதல்வர் எதையும் செய்யாமல் ஆட்சி முடிந்த நேரத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு காரணமான முக்கியமான மாவட்டமான திருப்பூர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை  செயல்பட முடியாமல் திணறி வருகிறது.

அதற்கு பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு தான் காரணம். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் ஆகியவற்றால் சிறுகுறு தொழில்கள் முடங்கி விட்டன. பாதிக்கப்பட்ட இந்த தொழில் வர்த்தகர்களை கொரோனா காலத்தில்  அழைத்துப் முதல்வர் பேசினாரா..? என கேள்வி எழுப்பினார். முதல்வர் மனதில் மக்களுக்கு இடமில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்