திருத்துங்கள்…! இல்லையேல் திருத்துவோம்…! – கவிஞர் வைரமுத்து
உலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்பட்ட புகைப்படங்களை பகிர்தல், திருவள்ளுவர் சிலைக்கு சாயம் பூசுவது போன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில், சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் புகைப்படமானது அவர் முடியற்ற நிலையில், தலையில் வழுக்கையுடன், காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் இருப்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த செயலை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்து அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருந்துங்கள், இல்லையேல் திருத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.