ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு – 3 போலீசார் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கித் தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் மாவட்டம் பட்காம் எனும் பகுதியில் நேற்றிரவு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது திடீரென மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த 3 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஜனிக்காம் எனும் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டர் சம்பவத்தின் போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
இதில் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். மேலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஸ்ரீநகரில் உள்ள பர்சுலா பகத் எனும் இடத்தில துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் 2 போலீசாரை சுட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசாரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025