INDvsENG: 4 ஆம் டெஸ்ட் போட்டியிலும் சாம் கரண் இல்லை.. நெருக்கடியில் இங்கிலாந்து அணி!

Default Image

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானம் இல்லாத காரணத்தினால் சாம் கரண் 4 ஆம் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கும் நிலையில், அடுத்த அஹமதாபாத்தில் வரும் 24 ஆம் தேதி நடக்கவுள்ள 3 ஆம் டெஸ்ட் போட்டி, முக்கியமானதாக உள்ளது. இதற்காக இரு அணிகளுக்கு அஹமதாபாத்துக்கு புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில், இங்கிலாந்து அணியில் அதிரடி ஆல்-ரவுண்டர் சாம் கரண், 4 ஆம் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தனிமைப்படுத்துதல் காரணமாக சாம் கரண் இந்தியா வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்தியா வந்து அவர் தனிமைப்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானம் இல்லாத காரணத்தினால் சாம் கரண் 4 ஆம் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்