காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா நேவால்..!

இந்தியாவின் சாய்னாநேவால் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவருடன் மோதிய பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டில், இந்தியா மிகப்பெரிய பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. கடைசி நாளான இன்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால், 21க்கு 18, 23க்கு 21 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்துவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் வெற்றிப்பெற்றார்.
நேற்று ஒரே நாளில், 8 தங்கம் உட்பட 17 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் வலுவாக நீடிக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024