#BREAKING: எம்.டெக் மாணவர் சேர்க்கை.. மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவு ..!

Default Image

இந்தாண்டு  மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் எம்.டெக் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு.

எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூடேஷனல் டெக்னாலஜியில் ஆகிய 2 பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை  எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகிய வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், இந்தாண்டு இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என அறிவித்துள்ளதாகவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு வரை மாணவர் சேர்க்கை மத்திய அரசு நடத்தி வந்ததால் அதனால் மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறையை பின் பற்றியதாகவும் இந்தாண்டு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டதால் மாநில அல்லது மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றுவதா..? என்ற  சிக்கல் எழுந்த நிலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் படிப்பு நின்றுவிடக்கூடாது  என்பதற்காக  இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்