மீண்டும் வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை.. இந்த தேதிக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும்..!
வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமைக் கொள்கையை மீண்டும் வெளியிட்டுள்ளது. இந்த முறையும் டேட்டாவிற்கு ஆபத்து உள்ளதா.? உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்படுமா..? பயனர்களுக்கு என்ன ஆபத்து என்பதை அறிந்து கொள்வோம்.
இந்த முறை வாட்ஸ் அப் புதிய தனியுரிமைக் கொள்கையை வணிகக் கணக்குகளுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் வெளியிட்ட அறிக்கையில் “நாங்கள் எங்கள் சேவை விதிமுறைகளையும், தனியுரிமைக் கொள்கையையும் மாற்றுகிறோம். புதிய கொள்கையின் கீழ், வாட்ஸ்அப் பிசினஸின் பயனர்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு பட்டியலை எடுக்க முடியும். மேலும் பயனர்கள் புதிய கொள்கையை மே 15 க்குள் ஏற்க வேண்டும்.
நிபந்தனையை ஏற்க எந்த அழுத்தமும் இல்லை:
சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் ஒரு புதிய தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டபோது, அனைவரும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், நீங்கள் அவற்றைக் ஏற்கவில்லை என்றால், நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என கூறப்பட்டது. ஆனால் இந்த முறை வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிசினஸின் புதிய தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்ற எந்த அழுத்தமும் இல்லை என்றும், நிபந்தனைகளை ஏற்காமல் நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் டேட்டா எடுக்கப்படாது:
உங்கள் தனிப்பட்ட தனியுரிமை பாதிக்கப்படாது என்பதை வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியுள்ளது. உங்கள் டேட்டா எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிரப்பட்ட தனிப்பட்ட செய்திகள், அழைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள், இருப்பிடம் போன்றவற்றை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் இரண்டுமே பார்க்க முடியாது என வாட்ஸ்அப் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வாட்ஸ் அப் அண்மையில் தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது. அந்த அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிரப்படும் அதுவும், பிப்ரவரி 8-ம் தேதிக்குள் இந்த Terms and Privacy Policy Updates-க்கு ஏற்றுக் கொள்ளவில்லை எனில் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்பின் இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கைக்கு (New Privacy Policy) எதிர்ப்பு தெரிவித்து பயனாளர்கள் சமுக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால், வாட்ஸ் அப் செயலியை நீக்கிவிட்டு பயனாளர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கு மாறினர்.
இதன்காரணமாக டெலிகிராம் மற்றும் சிக்னல் பதிவிறக்கங்கள் அதிகரித்தன. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழவே தனியுரிமை கொள்கை மாறுபட்டை வாட்ஸ் அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.