விலை உயர்வு தான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு…! மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு என்றும் விமர்சித்துள்ளார்.
மதுரை வண்டியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துவதாகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக மூலம் பாஜக கால் ஊன்ற நினைக்கிறது. ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து மோடி ஒளவையின் பாடலை கூறலாமா? என்றும், உன்னத தலைவர்களால் உரம் போட்டு உருவாக்கப்பட்ட தமிழகத்தில் இழந்த உரிமையை மீட்க பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.