IPL 2018: எதிரியின் கோட்டையில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சன் ரைசஸ் அணி !

Default Image

இன்று 10 வதுதொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

அடுத்து 139 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா சஹா மற்றும் தவான் களமிறங்கினர்.

அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது அரை சதத்தை  பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார் .சஹா 24 ரன்களிலும் ,ஹசன் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர் .

யூசப் பதன் 19 வது ஓவரில் அடித்த சிக்ஸர் அணியின் வெற்றி இலக்கை எட்டியது .

ஹைதராபாத் அணி  5 விக்கெட்டு வித்தியாசத்தில் 19 ஓவர்களில் 139  ரன்களை குவித்து மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தனது  முதல் இடத்தை தக்கவைத்துகொண்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்