#Breaking: கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை.. மொயின் அலியை விட அதிக தொகை!
இந்திய வீரரான கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்ப கவுதமை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு எடுத்தது.
2021 ஆம் ஆண்டிற்கான 14 வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம், இன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வருகின்றன.
அப்பொழுது இந்திய வீரரான கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்ப கவுதமை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை எடுக்க கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிறுவிவந்த நிலையில், சென்னை அணியும் அந்த போட்டியில் கலந்துகொண்டது. இறுதியாக சென்னை அணி, கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது. சென்னை அணி, அதிரடி வீரரான மொயின் அலியை 7 கோடிக்கு எடுத்தது, குறிப்பிடத்தக்கது.