3 மணி நேரத்தில் கர்ணன் அழைப்பு.. வெளியான வெறித்தனமான போஸ்டர்..!
நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடலான “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் வெளியாகும் என்று நேற்று படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள் அதனை தொடர்ந்து தற்போது புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில் இந்த பாடலை மாரிசெல்வராஜ் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
#Karnan update alert! #MusicVideo of #KandaaVaraSollunga will be out today at 8pm, get ready to witness the magic of @Music_Santhosh @dhanushkraja @mari_selvaraj @thinkmusicindia @KarnanTheMovie #KarnanArrivesOnApril9 https://t.co/JvmOFSEeyf pic.twitter.com/qjRBW2kAkI
— Kalaippuli S Thanu (@theVcreations) February 18, 2021