புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் அரசு நிர்வாகம் தொடர்பாக ஆளுநருடன் விவாதித்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.