#IPLAUCTION2021: ஏலத்தை அலறவிட்ட மேக்ஸ்வெல்., ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி தூக்கியது.!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி எடுத்துள்ளது.
2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள், வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ரூ.20 கோடி அடிப்படை விலையில் தொடங்கிய ஏலம், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் போட்டிபோட்டனர். இறுதியாக பெங்களூர் அணி ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை எடுத்துள்ளது. மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை, பெங்களூர் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பெங்களூர் அணி கைப்பற்றியது.