ஹீரோவாகும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் மருமகன்.!இயக்குவது இந்த ஹிட் பட இயக்குனராமே.?
மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தனது மருமகனான ஆகாஷை வைத்து படமொன்றை தயாரிக்க உள்ளதாகவும்,அதனை விஷ்ணு வர்தன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது.இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ தனது மருமகனை ஹீரோவாக்க முயன்று வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
சேவியர் பிரிட்டோவின் மகளின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றதும்,அவரது மருமகன் ஆகாஷ் என்பதும் ,அவர் நடிகர் அதர்வாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அடுத்ததாக சேவியர் பிரிட்டோ தனது மருமகனான ஆகாஷை வைத்து படமொன்றை தயாரிக்க உள்ளதாகவும்,அந்த படத்தினை அஜித்தின் ஆரம்பம், பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை . சமீபத்தில் சேவியர் பிரிட்டோ அடுத்ததாக அழகிய கண்ணே எனும் படத்தினை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது .