தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை…!

Default Image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் , ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் முதல் அலகை தொடர்ந்து நடத்த அனுமதி கோரிய  விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், போராட்டம் சில சமூக விரோதிகளால் திசைதிருப்பப்பட்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.  பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்