ஹெச். ராஜாவுக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் காட்டப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க.வினர் திடீர் மறியல்…!

Default Image

பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. இதில் பங்கேற்க ஹெச். ராஜா வந்தபோது, வழியில் ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டினர். இதனால் அதிருப்தியடைந்த ஹெச்.ராஜாவும், பா.ஜ.க.வினரும், கருப்புக்கொடி போராட்டத்துக்கு அனுமதி அளித்த போலீசாரைக் கண்டித்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க.வினர் திடீரென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் உருவபொம்மையை எரித்தனர். இதைத் தடுத்த போலீசார், ஒருவழியாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்