#IPLAUCTION2021: நாளை சென்னையில் ஐபிஎல் ஏலம்., எந்தெந்த அணியிடம் எத்தனை கோடி உள்ளது?

Default Image

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படையிலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேஸன் ராய் உள்ளிட்ட 7 வெளிநாட்டு வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 தமிழக வீரர்களும் போட்டியில் உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த ஏலம் நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 6 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதில் ஒருவர் வெளிநாட்டு வீரராக இருக்கலாம். கைவசம் ரூ.19.90 கோடி உள்ளது.

மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் இடம் ரூ.13.4 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.53.20 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.10.75 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ.15.35 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.37.85 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ.35.40 கோடி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.10.75 கோடி கைவசம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்