தமிழக திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்..!
காணொலி காட்சி மூலம் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பங்கேற்றார்.