மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? – முக ஸ்டாலின்

Default Image

மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரையில் மாவட்டத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்ட பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வரிசையாக பட்டியலிட்டார். இதுபோல் அதிமுக செய்த திட்டங்களை சொல்ல முடியுமா என்றும் முதல்வர் பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.

இதையடுத்து பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும் என்று நினைத்து ஏமாற்றம் தான் அடைந்தேன். கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக அரசு அறிவித்தது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 20218 ஆம் ஆண்டு மீண்டும் அறிவிப்பை வெளியிட்டது பாஜக. அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்கு மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். தற்போது இரண்டு ஆண்டுகள் காலம் எதுவும் நடக்கவில்லை என குற்றசாட்டியுள்ளார். மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எய்ம்ஸ் என்ற ஒரே ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு பாஜக இன்னும் தாமதம் செய்து வருகிறது. ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கினால் தான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் நிலை உள்ளதா? என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்