அமெரிக்காவின் செல்லப்பிராணிகள் கடையில் தீ விபத்து – 100-க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழப்பு!
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் உள்ள செல்லப்பிராணிகள் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் உள்ள செல்ல பிராணிகள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் அந்த கடையில் இருந்த செல்ல பிராணிகள் 100 – க்கும் மேற்பட்டவை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயில் கருகிய விலங்குகளையும் வெளியில் எடுத்துள்ளனர். இதில் 40 நாய்கள், 25 கிளிகள், முயல்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகளும் இருந்துள்ளது.