என் மகள் அழகாக இருப்பாளே ,அவளை வளர்த்து டாக்டராக்கி அழகுபார்க்க நினைத்தேனே.!கதறியழுத 8-வயது சிறுமியின் தாயார் .!

Default Image

காஷ்மீரின் கதுவாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8-வயது சிறுமியின் தாயார்  ‘என் மகள் அழகாக இருப்பாளே’, ‘புத்தாலியாக இருப்பாளே’, ‘அவளை வளர்த்து டாக்டராக்கி அழகுபார்க்க நினைத்தேனே’ என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி காணாமல் போனார். அதன்பின் 17-ம் தேதி கதுவாவில் உள்ள ரஸானா காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் உடற்கூறு ஆய்வில் சிறுமிக்கு போதை மருந்து தரப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 3 போலீஸார், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் தாயிடம் கடந்த சில ஆண்டுகளாக அந்த சிறுமி வசிக்கவில்லை. அந்தத் தாயின் சகோதரர், அதாவது அந்த சிறுமி தனது தாய்மாமாவுடன் கதுவா பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி இறந்த தகவல் அவரின் தாய்க்கு தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. அதைக் கேட்டால், மனம் நொந்துவிடுவார் என அவரின் குடும்பத்தினர் மறைத்து வந்தனர். இந்நிலையில், வேறு வழியின்றி கடந்த சில நாட்களுக்கு முன் தாயிடம் சிறுமிக்கு ஏற்பட்ட கதியையும், இறந்துவிட்டதையும் தெரிவித்துள்ளனர். அதுமுதல் அந்தத் தாய் கதறி அழுது வருகிறார்.

8 வயது சிறுமியின் தாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

”என் மகள் அழாகாக இருப்பாளே. புத்தாலியாக பேசுவாளே. அவளை ஏன் கொலை செய்தார்கள். அவளுக்கு 8 வயதுதானே ஆகிறது. என்னால் வளர்க்க முடியவில்லை என்று என் சகோதரர் வீட்டில் விட்டிருந்தேன். அவருடன் என் மகள் வளர்ந்து வந்தாள். கால்நடைகளையும், குதிரைகளையும் மேய்த்துக் கொண்டிருந்த என் மகளுக்கு இதுதான் கதியா?

இந்த ஆண்டில் இருந்து என் மகளை அழைத்து வந்து பள்ளியில் படிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். அதற்காக பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் கேட்டு வைத்திருந்தேன். புத்திசாலியான அவளை நன்கு வளர்த்து டாக்டராக்கி பார்க்க அசைப்பட்டேனே?

இந்த சம்பவத்தை நான் அறியும் முன், கேட்கும் முன் என் அண்டை வீட்டில் வசிக்கும் இந்துக்களுடன் நல்ல நட்பும், ஒற்றுமையும் இருந்தது. ஆனால், என் மகள் சாவுக்குப் பின், அவர்களுடன் நட்பு பாராட்ட மனம் இடம் தரவில்லை. மிகுந்த அச்சமாக இருக்கிறது.

எனக்கு என் மகளை திருப்பிக் கொடுங்கள். என் அன்பு மகளை திருப்பிக் கொடுங்கள், என் அழகான மகளை திருப்பிக் கொடுங்கள். எனக்கு நீதி வேண்டும். என் மகளைக் கொலை செய்தவர்களை தூக்கில் போடுங்கள்” என்று கண்ணீர் விட்டு கதறினார்.

அந்தச் சிறுமியின் தந்தை கூறுகையில், ”பிரதமர் மோடி பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிறார். இப்படிபட்ட சமூகத்தில் பெண் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது? பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்களே செயல்படுகிறார்கள். அவர்கள் அப்பாவிகள், என்ன தவறு செய்தார்கள் என்று அமைச்சரே கேட்கிறார்.

உலகமே இச்சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. என் மகளுக்கு நேர்ந்த கதி இனிமேல் யாருக்கும் நேரக்கூடாது. சிபிஐ விசாரணை ஏதும் தேவையில்லை. குற்றவாளிகளைத் தூக்கில் போடுங்கள்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்