ராஜஸ்தானில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழப்பு; 14 பேர் படுகாயம்!
ராஜஸ்தானில் உள்ள கங்காநகர் மாவட்டத்தில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் எனும் மாவட்டத்தில் அனுப்கர் – சூரத்கர் எனும் நெடுஞ்சாலையில் இரு கார்கள் வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு காரில் இருந்த குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தியலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், காரில் பயணம் செய்த 14 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை உட்பட உயிரிழந்த மூவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கார்கள் இரண்டும் வேகமாக வந்த நேரத்தில் மோதியதால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.