வலிமை அப்டேட் குறித்து.. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இங்கிலாந்து வீரரான மொயீன் அலி தன்னிடம் வந்து வாட் ஈஸ் வலிமை என்று கேட்டதாக அஸ்வின் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழு கொடுக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் அப்டேட் கேட்டு வருகிறார்கள்.
அது மட்டுமின்றி முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் தல ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர் . சமீபத்தில் கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரரான மொயீன் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி தன்னிடம் வந்து, வலிமை என்றால் என்ன என்று கேட்டதாகத் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது குறித்து அஸ்வின் கூறியதாவது,
நாம் திரைப்படங்களின் மீது எவ்வளவு ஈடுபாடா,பைத்தியமாக இருக்கிறோம் என்பதற்கு உதாரணம். நான் பவுண்டரியில் பவுலிங்கிற்காக நின்று கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் என் பின்னுலிருந்து ‘தல. அஸ்வின் வலிமை அப்டேட் எங்கே’ என்று கேட்டார் .வலிமைனா என்ன என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே ஆடிப் போய்விட்டேன்.பின்பு வீட்டுக்குச் சென்று கூகுள் செய்து பார்த்தபோது என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
மேட்ச் ஆடிக்கொண்டிருக்கும்போது வலிமை அப்டேட் கேட்டால் என்னவென்று நினைப்பது .அதற்கு அடுத்த நாள் மொயீன் அலி என்னிடம் வந்து ‘வாட் இஸ் வலிமை?’ என்று கேட்டார். அப்போது தான் புரிந்தது மொயீன் அலியும் அதே இடத்தில் நிற்கும்போது அதே கேள்வியை அவரிடமும் கேட்டுள்ளார்கள் தெரிந்தது.நீங்க கலக்கிட்டீங்க, ஒரு இங்கிலாந்து வீரரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டதெல்லாம் அற்புதம்,என்னால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
Ashwin funny speech vadai master???????? and ????Thala #Valimai movie update…#Valimai#ThalaAjith pic.twitter.com/JdsGiO1nvt
— ☬THALA NANDHA☬ (@Thala_Nandha_07) February 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)