#BREAKING: நாளை புதுச்சேரி ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்கிறார் ..!

நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநாராக பொறுப்பேற்கிறார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி பல குற்றச்சாட்டு இருந்தது. அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பாக துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தராஜன் செயல்படுவார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநாராக பொறுப்பேற்கிறார். கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025