இங்கிலாந்துக்கு எதிரான 2வது இன்னிங்சில் அரைசதத்தை கடந்த அஸ்வின்.!
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது இன்னிங்சில் அஸ்வின் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையில் பெற்று, நேற்று இரண்டாவது தனது 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். இதில் கில் ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் 25 ரன்களில் ரோஹித் ஷர்மாவும், புஜாரா 7 ரன்கள் அடித்திருந்தனர்.
இதனையடுத்து இன்று மூன்றாவது நாளான 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, சொற்ப ரன்களில் முக்கிய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதில் கேப்டன் விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்து, 62 ரன்கள் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் நிதானமாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். தற்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அஸ்வின் 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மறுபுறம் இஷாந்த் சர்மா களமிறங்கியுள்ளார். தற்போது இந்திய அணி 411 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.