#BREAKING : பிப்ரவரி 24-ஆம் தேதி விருப்பமனு விநியோகம் – அதிமுக

Default Image

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் வழங்க அதிமுக தலைமைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.மேலும்  கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் வழங்க அதிமுக தலைமைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்.தமிழ்நாட்டிற்கு ரூ.15,000 கட்டணத்தொகை,புதுச்சேரிக்கு ரூ.5000 ,கேரளாவிற்கு ரூ.2000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற 24 -ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்