காக்க காக்க படத்தில் தளபதி நடிக்காததற்கு கரணம் என்ன தெரியுமா..?
காக்க காக்க படத்தின் முதல் பாதியை நடிகர் விஜய் கேட்டவுடன் மிகவும் பிடித்திருந்ததாம் ஆனால் இரண்டாவது பாதி இயக்குனர் கௌதம் மேனன் முழுவதுமாக முடிக்காமல் இருந்ததால் விஜய் நடிக்கவில்லையாம்.
தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இசையமைப்பார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனையையும் செய்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் காக்க காக்க படத்தை பற்றி சில விஷியங்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது” காக்க காக்க திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்த படத்தின் கதையை நான் முதன் முதலாக சூர்யாவிடம் கூறவில்லை, விக்ரம் மற்றும் விஜய் அஜித் ஆகியோரிடம் தான் கூறினேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாதியை நடிகர் விஜய் கேட்டவுடன் மிகவும் பிடித்திருந்ததாம் ஆனால் இரண்டாவது பாதி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முழுவதுமாக முடிக்காமல் இருந்ததால் அதில் நடிக்க நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.