முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ்.. நாளை டோக்கன்..!

Default Image

சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக  முதியோர்களுக்கான இலவச பஸ் பாஸ் சென்னையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயண அட்டைகளை முதியவர்கள் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10 வீதம் 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும், புதியதாக பெற விரும்புபவர்கள் www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்