கொரோனாவால் பாதிக்கப்பட்ட இத்தாலிய பெண்ணின் விரல்கள் கறுப்பு நிறமாக மாற்றம்.!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86வயதான பெண்ணின் விரல்கள் கறுப்பு நிறமாக மாறியதால் மருத்துவர்கள் அதனை வெட்டி மாற்றியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் 87வயதான இத்தாலிய பெண் ஒருவர் இதயத்தில் இரத்தம் ஓட்டம் இல்லாததை கண்டறிந்ததை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .அறிகுறியில்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளான அந்த பெண்ணின் இரத்த நாளங்கள் சேதமடைந்து இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக அந்த பெண்ணின் வலது கையின் இரண்டாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்கள் கறுப்பு நிறமாக மாறியுள்ளனர் .மேலும் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருப்பதையும் கண்டறிந்துள்ளதை தொடர்ந்து மருத்துவர்கள் கறுப்பு நிறத்தில் மாறிய அவரது விரல்களை வெட்டியுள்ளனர் . இதுகுறித்து தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் கிரஹான் குக் கூறுகையில்,கொரோனா என்பது பல அமைப்பு நோய் ஒன்றும் ,இது ஹைபர்கோகுலேபிள் நிலை என்றும் ,இது இரத்தம் உறைவதால் ஏற்படுவதாகவும் ,எனவே ரத்தம் உறைதலை உடைய கொரோனா நோமாளிகளை அதிகளவில் கவனிக்க வேண்டியதாகவும் கூறியுள்ளார்.மே மாதத்தில் மட்டும் 30 % கொரோனா நோயாளிகளுக்கு இரத்த உறைதல் பிரச்சினை இருந்ததாக லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ரூபன் ஆர்யா தெரிவித்துள்ளார்.